Pesum Arangam

//sri://
 
பேசும் அரங்கம்…
(Compiled by Muralibattar muralibattar@gmail.com)
ஈனச்சொல் ஆயினுமாக ஏறிதிரைவையம்முற்றும்
ஏனத்துருவாய் இடந்த பிரான் – இருங்கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும்  மற்றெல்லா எவர்க்கும்
ஞானப்பிரானை அல்லாலில்லை  நான் கண்ட நல்லதுவே
ஸ்ரீபாஞ்சராத்ரம் – 35
10-04-2011
ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்
::பூத சுத்தி ::
பிறகு அனைத்து ஒளிமயமான வஸ்துக்களை தியானிக்கவும்.
பிறகு அக்னி தத்வமானது “ரூப சக்தி“யில் லயமடைந்ததாக தியானிக்கவும்.
இந்த “ரூப சக்தி“ ஞானமயமானது. பிறகு இந்த ரூபசக்தியை வாயுவிலே ரேசகத்தினாலே வெளியேற்ற வேண்டியது.
பிறகு வெளியே இருக்கக்கூடிய வாயுதத்துவத்தினைத் தியானிக்கவும்.
இந்த வாயுவானது பலவிதமான கந்தங்களோடு கூடியது.
பிறகு வாயுமந்த்ரத்தினை உச்சரித்து இந்த வாயுவின் சொரூபத்தினைத்
தியானிக்கவும்.  பிறகு பூரகத்தினால் கழுத்திலிருந்து நாபி வரை இந்த
வாயுவினால் வியாபிக்கப்பட்டதாய் நினைக்கவும்.  பிறகு இந்த வாயு தத்துவத்தினை “ஸபர்ச“ சக்தியிலே லயமடைந்ததாய் தியானிக்கவும்.
இந்த ”ஸ்பர்ஸ” சக்தியினை ஆகாய மண்டலத்தில் சேர்க்கவேண்டும்.
பிறகு வெளியே அனைத்து சப்தங்கள் கொண்டதும், நிறமற்றதும்,
பல உருவமற்ற, உடலற்ற சித்தர்களாலே நிரம்பியதுமான ஆகாயத்தினை அதற்குரிய மந்திரத்தினைக் கூறி தியானிக்கவும்.  பிறகு பூரகம் மூலமாக இந்த ஆகாயத்தினாலே கழுத்திலிருந்து ப்ரும்மரந்த்ரம் வரை வியாபிக்கப் பட்டதாய் நினைக்க வேண்டியது.  பின்பு தந்மந்த்ரமாகவே மாறிய அந்த ஆகாய தத்துவத்தை  கும்பகத்தினாலே தியானிக்க வேண்டியது.  இந்த மந்த்ரமாக மாறிய ஆகாய தத்துவத்தினை பிறகு சப்த சக்தியாக மாறுவதாக தியானிக்கவும்.  பிறகு சப்த சக்தியை ப்ரும்மரந்தரத்தின் வழியே வெளிக் கிளம்பி,  மற்ற நான்கு சக்திகளோடும் சேருகின்றதாக தியானிக்கவும்.
                                                                                                          …..தொடரும்..
இந்த பரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யானம் இருப்பதாக அறிந்தோமே தவிர இதுவரை முயற்சிகள் பலசெய்தும் பலன் கிட்டவில்லை.  கிஞ்சித்காரம் டிரஸ்டில் பணிபுரியும் சம்ஸ்கிருத வல்லுநர் திரு் பரத் அவர்கள் இதுகாறும் மூன்று அத்யாயங்களின் சாராம்சங்களை தெளிவுபடுத்தினார்.  அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.  இதர அத்யாயங்களுக்கும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.  தெளிவுபட தெரிந்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.  அதுவரை தாங்களது பொறுமையை சோதிப்பதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன்.  தாஸன் -முரளீபட்டர்-
Pls click <here> for this previous chapters

One comment on “Pesum Arangam

Leave a comment